79.7 F
Tirunelveli
Friday, January 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட எஸ்பி புத்தாடைகள் வழங்கி கொரனா விழிப்புணர்வு

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட எஸ்பி புத்தாடைகள் வழங்கி கொரனா விழிப்புணர்வு

தூத்துக்குடி – ஜன – 13,2022

தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் முன்கள தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் ஒமைக்கரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்களப்பணியாளர்களாகிய தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்தாடை மற்றும் இலவச முககவசம் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே கடை உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எல்லா வழிப்பாட்டு தலங்களுக்கும் நாளை (14.01.2022) முதல் வரும் 18.01.2022 அன்று வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வரும் 16.01.2022 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பண்டிகை காலங்களில் பத்திரிக்கை & தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் அவர்கள் பல உதவிகள் செய்து வரும் சமூக பணி பாராட்டுகுரியதாகும். மேலும் அவரது இந்த சமூக பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், பொருளாளர் கணேசன், இணை செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் மார்க் மகேஷ், சங்க செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல் குணசிங் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முருகபெருமாள், முத்துகிருஷ்ணன், மத்தியபாகம் காவல்நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியன், லயன்ஸ்டவுன் பங்குதந்தை பிரதீபன் லிபோன்ஸ், தூத்துக்குடி சிவன்கோவில் பிரதான அர்ச்சகர் கல்யாண சுந்தர சிவாச்சாரியர், அர்ச்சகர் ஹரிராகவன், கிரேஸண்ட் பள்ளி தாளாளர் மீராசா, சங்க நிர்வாகிகள் மார்ட்டின் ராபர்ட், சாம்ராஜ், உறுப்பினர்கள் சொக்கலிங்கம், முத்துகுமார், சுபாஷ், சுதர்சணா, மந்திரமூர்த்தி மற்றும் பொதுமக்கள், தூய்மை பணியார்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்