76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி தென்காசியில் ஒரேநாளில் மூன்று நபர்களின் அபகரிக்கபட்ட நிலங்கள் மீட்பு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி உரியவர்‌‌‌களிடம் ஒப்‌‌‌படைப்‌‌‌பு

தென்காசியில் ஒரேநாளில் மூன்று நபர்களின் அபகரிக்கபட்ட நிலங்கள் மீட்பு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி உரியவர்‌‌‌களிடம் ஒப்‌‌‌படைப்‌‌‌பு

தென்காசி – ஜன,07,2022

ஒரே நாளில் மூன்று வெவ்வேறு நபர்களின் நிலம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைப்பு

தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் நில மோசடி, நில அபகரிப்பு, போலி ஆவணம் போன்ற புகார்களை உரிய முறையில் விசாரணை செய்வதற்கென நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.


1)இந்நிலையில் சங்கரன்கோவில் கருத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் ராக்கன் என்பவரின் மகன் சின்னநாகப்பன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை போலியான ஆவணம் மூலம் எதிர்மனுதாரர் பிறருக்கு ஏற்பாடு ஆவணம் எழுதி கொடுத்துள்ளதாகவும் தனது இடத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகார் மனு.
2) சங்கரன்கோவில் தாலுகா ஆண்டார்குளம் பகுதியில் வசித்து வரும் குருசாமி என்பவரின் மகன் ரவி என்பவர் ஈச்சந்தா கிராமத்தில் தனக்கு சொந்தமான 41 ஏர் நிலத்தின் சரிபாதி நிலம் தனக்கு பாத்தியப்பட்டதாகவும் அதை எதிர்மனுதாரர் அவரது மனைவியும் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்ததாகவும் தனது நிலத்தை மீட்டு தருமாறு கொடுத்த புகார் மனு.


3) பங்களாசுரண்டை பால்சாமி என்பவரின் மகன் நேசையா என்பவர் தனது தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட 22 சென்ட் நிலத்தை தனது சித்தியின் மகன் போலி ஆவணம் தயார் செய்து அதை வேறொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டதாக கொடுத்த புகார் மனு.

மேற்கண்ட புகார் மனு குறித்து காவல் ஆய்வாளர் சந்திசெல்வி சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒரே நாளில் 3 மனுக்களுக்கு தீர்வு கண்டு பாதிக்கப்பட்டவர்களின் நிலம் மீட்கப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.தங்களின் துரித நடவடிக்கை மூலம் நிலத்தை மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு, மனு அளித்த 3 நபர்களும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்தனர். மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்