திருவாரூர் – ஜன -19,2022
செய்தியாளர் – சோமாஸ்கந்தன்
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாக
விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று(19.01.22)திருவாரூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள் 40 பேர் தங்களது
பல்வேறு விவசாய பிரச்சினைகள் குறித்துமனு அளித்துள்ளனர்.
அம்மனுக்கள் மீது
காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.