திருநெல்வேலி – ஜன -19,2022
புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர், , வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக் பொறுமையாக கேட்டறிந்து கண்ணியத்துடன் நடந்து கொண்டு, புகாரின் தன்மையை அறிந்து கொண்டு அதனை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சிறப்பாக பணி செய்து வருகிறார். இவர் இன்று பணியில் இருந்த போது திசையன்விளையை சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் புகார் மனு அளிக்க வந்திருந்தார். அவர் வயது முதிர்வால் நடக்க முடியாமல் இருந்த போது அவரை அன்போடு அரவணைத்து அழைத்து சென்று காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வைத்தார். பின்னர் வயதான நபரை காவலர் திரு. ஜெஸ்கர், அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி புதிய பேருந்து நிலையம் அழைத்துச் சென்று அவருடைய சொந்த செலவில் ஊருக்கு அனுப்பிவைத்தார். காவலரின் இந்நற்செயலைக் கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப முதியவரிடம் கனிவோடு நடந்துகொண்டு, சிறப்பாக பணிசெய்து வரும் காவலர் ஜெஸ்கர், அவர்களை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.