76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 1,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள குட்கா பறிமுதல் டிஎஸ்பியின்‌‌‌‌ தனிப்படை அசத்தல் மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டு பாராட்டு

1,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள குட்கா பறிமுதல் டிஎஸ்பியின்‌‌‌‌ தனிப்படை அசத்தல் மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டு பாராட்டு

தூத்துக்குடி – ஜன-02,2021

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1,00,000/- ( ஒரு லட்சம்) மதிப்புள்ள 300 பண்டல் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 2 பேர் கைது – புகையிலைப் பொருட்களும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ், தலைமை காவலர்கள் நிறைகுளத்தான், சற்குணம் மற்றும் காவலர் நயினார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 75 S 5950 Honda Dio என்னும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் லிங்கபெருமாள் (26), த/பெ. முருகேசன், நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சாம்ராஜ் (23), த/பெ. சந்திரன், வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம் ஆகியோர் என்பதும் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 3 சாக்கு மூட்டைகளில் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒருவரிடம் குறைந்த விலைக்கு புகையிலைப் பொருட்களை வாங்கி திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் லிங்கபெருமாள் மற்றும் சாம்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,00,000/- ( ஒரு லட்சம்) மதிப்புடைய 300 பண்டல்களில் மொத்தம் 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 2 எதிரிகளை கைது செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்