79.7 F
Tirunelveli
Friday, January 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் விதமாக மாவட்ட எஸ்பி ஒளிரும் விளக்குகளை திறந்‌‌‌து வைத்தார்

சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் விதமாக மாவட்ட எஸ்பி ஒளிரும் விளக்குகளை திறந்‌‌‌து வைத்தார்

திருநெல்வேலி – ஜன,04,2021

வாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக முக்கிய சாலை சந்திக்கும் இடங்களில் அதிக அளவில் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே மேற்படி முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை அமைக்கும் போது அதை கவனிக்கும் வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை பயன்படுத்துவதன் மூலமும், வேகத்தை குறைப்பதன் மூலமும் தவறும் பட்சத்தில் பிரேக்கை பயன்படுத்தி விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப, பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் தேசிய நெடுஞ்சாலையில் சாலைவிபத்து அதிகமாக ஏற்படும் பகுதியாக KLRF மாவு மில் ஜங்சன் கண்டறியப்பட்டு அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டில்
ஒளிரும் விளக்குகள் மேற்படி KLRF ஜங்சனில் அமைக்கப்பட்டது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப நேரில் சென்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் பெருமாள், உதவி ஆய்வாளர் மாடசாமி மற்றும் சிப்காட் திட்ட அலுவலர் நஷீர் அகமது மற்றும் சிப்காட் தனியார் நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்