86 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு.....

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

தூத்துக்குடி – ஜன -19,2022

தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

கடந்த 06.01.2022 முதல் 09.01.2022 வரையில், திருச்சி ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கத்தில் தமிழக காவல்துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையே கபடி, கையூந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, கொகொ மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ மற்றும் சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கூடைப்பந்து போட்டியில் தெற்கு மண்டலம் சார்பாக 12 காவல்துறையினர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து கேடயம் மற்றும் பதக்கம் பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மத்தியபாகம் காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் பூலையாநாகராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்.

மேற்படி மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்ற தலைமைக் காவலர் பூலையாநாகராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் தாமரைக்கண்ணன் ஆகியோரை இன்று (19.01.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்