76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி முறையான பயிற்சி இல்லாமல் மருத்துவம் பார்த்தால் சிறை ஐஜி கடும் எச்சரிக்கை

முறையான பயிற்சி இல்லாமல் மருத்துவம் பார்த்தால் சிறை ஐஜி கடும் எச்சரிக்கை

திருச்சி – ஜன,06,2022

செய்தியாளர் – எஸ்.எம் பாரூக்

சமீபத்தில் திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டரை மாத பச்சிளம் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாய் தானாகவே வயிற்று வலிக்கு மருந்து கொடுத்து அதனால் உடல்நிலை மேலும் மோசமாகி பின்னர் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுமக்கள் இது போன்று தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வரும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 304(11) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருண்ஷன், ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவிற்கு முறையாக மருத்துவம் படித்து பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகி அவர்களது அறிவுரைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்