76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி புதிய புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி திறந்து வைத்தார்

புதிய புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி – ஜன,06,2022

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மற்றும் 3 சிசிடிவி கேமாராக்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்பூர் ரோடு, ஓசனூத்து ரோடு ஜங்ஷன் பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 சிசிடிவி கேமராக்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்;கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது. இந்த புறக்காவல் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். மேலும் தற்போது சிசிடிவி காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம், மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வரவேண்டும்.

மேலும் தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

பின்னர் இந்த புறக்காவல் நிலைய பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இருந்தவர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா மற்றும் போலீசார் செய்திருந்தனர். இவ்விழாவில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் சீதாராம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் சிதம்பரம், ஊர்பொதுமக்கள் முத்துராஜ், கணபதிராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்