73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் சென்னை ஒமைக்ரான் கொரனா தொற்றுபரவலை தடுக்க மண்டல குழு அடங்கிய வாகனத்தை கூடுதல் கமிஷனர் கொடியசைத்து ...

ஒமைக்ரான் கொரனா தொற்றுபரவலை தடுக்க மண்டல குழு அடங்கிய வாகனத்தை கூடுதல் கமிஷனர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

சென்னை – ஜன- 01,2022

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இணைந்த ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக “மண்டல அமலாக்க குழுவினருக்கு” (ZET) வழங்கப்பட்ட வாகனங்களை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய 30 மண்டல அமலாக்க குழுவினர் (Zonal Enforcement Teams – ZETs) உருவாக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்கள் சென்னை பெருநகரின் எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், கடற்கரை பகுதிகள், கடைவீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள் ஆகிய பகுதிகளை தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கடைப்பிடிக்காத பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலிப்பார்கள். அதனுடன் திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல், கோவிட் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை பொதுமக்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

அதன்படி சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் உள்ளடக்கிய 30 மண்டல அமலாக்க குழுவினருக்கு (Zonal Enforcement Team-ZETs) வழங்கப்பட்ட 30 வாகனங்களை சென்னை பெருநகர காவல் துறை காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் கண்ணன், இ.கா.ப அவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷுமகாஜன், இ.ஆ.ப., இணைந்து ரிப்பன் மாளிகையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்