திருநெல்வேலி – ஜன – 19,2022
கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரியான பாளையங்கோட்டை சமாதானபுரம் எரிபத்த நாயனார் தெருவை சேர்ந்த, அந்தோணி லோயலான் மகன் அனிஸ்பர் என்பவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரியை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் பொறுப்பு சுரேஷ்குமார் பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையாளர் திரு.பாலச்சந்திரன் அவர்கள், மற்றும் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் துரைக்குமார் இ.கா.ப உத்தரவின் படி , பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி அவர்கள், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 19-01-2022 ம் – தேதியன்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.