கன்னியாகுமரி – ஜன-26,2022
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
ஜனவரி 26, கன்னியாகுமரி
மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் IAS தேசிய கொடியேற்றினார்.
அவருடன் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்
வெ.பத்ரி நாராயணன் IPS கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல காவல் அதிகாரிகள் மற்றும் பல துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கொலை, கொள்ளை, கஞ்சா,சைபர் வழக்குகள் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குண்டர் சட்டம், நன்னடத்தை பிணை பெறுதல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள்.
கொலை, கொள்ளை, கஞ்சா, குட்கா வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து,பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பான பங்களிப்பினை யாற்றிய தனிப்படை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள்.
கொரோனா பேரிடரில் முன்கள பணியாளர்களாய் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்.
மழை வெள்ளத்தின் போது மக்களின் உயிரினையும், உடைமையினையும் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பாற்றிய காவலர்கள்.
நீதிமன்ற நடைமுறை சம்பந்தப்பட்ட பணிகளில் திறம்பட செயலாற்றிய காவலர்கள்.
குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நன்னடத்தை பிணை பெறுவதற்கு சிறப்பாக பங்களிப்பாற்றிய காவலர்கள்.
போக்சோ வழக்குகளில் மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கைகளை விரைந்து பெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்த காவலர்கள்.
போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து காவலர்கள்.
வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்த சி.சி.டி.என்.எஸ் கணினி காவலர்களுக்கும்.
காவல்துறை பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்து நிலைய பொறுப்பு அதிகாரிக்கு உதவிய எழுத்தர்கள்.
காவல்துறையினருக்கு போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதிலும், கொரோனா பேரிடர் காலங்களில் உதவியாக இருந்த ஊர்காவல் படையினர்.
ஆகியோரை பாராட்டி அவர்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.