77.5 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்து கொடுத்த சமுக சேவகருக்கு...

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்து கொடுத்த சமுக சேவகருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஜன,04,2021

செய்தியாளர் – கே.நியாஸ்

சென்னையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக துரிதமாக செயல்பட்ட வங்கி மேலாளராகிய சமூக சேவகர் முகமது அலி ஜின்னா என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக, அன்றைய தினம் மாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பொழுது அன்று இரவு சுமார் 7 மணியளவில், அண்ணா சாலை, அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை கண்ட இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது அலி ஜின்னா என்பவர் அவரது இருச்ககர வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னால் இருந்த வாகனங்களை சிறிது சிறிதாக நகர்த்தச் சொல்லி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தே சென்று 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல உதவினார்.

விசாரணையில் முகமது அலி ஜின்னா (வ/41) இராயப்பேட்டை, என்பவர், பாரிமுனை IDFC தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருவதும், அவர் சமூக சேவகர் என்பதும், கடந்த 8 ஆண்டுகளாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 02.00 மணி வரையில் அவசர சிகிச்சை பிரிவில் விபத்து மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதும் தெரியவந்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள், மேற்படி சம்பவத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 3 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட நடந்து சென்ற முகமது அலி ஜின்னாவை நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்