77.5 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு

திருச்சி – ஜன -12,2022

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

கடந்த 05.01.2022 முதல் 08.01.2022 வரை காவல்துறையினருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு நடைபெற்றது. இதில் சென்னை சிட்டி அணி, வடக்கு மண்டல அணி. ஆயுதப்படை மாவட்டம், ஒத்திவாக்கத்தில் மண்டல அணி, மேற்கு அணி, தலைமை நிறும அணி, மத்திய மண்டல அணி மற்றும் மகளிர் அணி ஆகிய 8 மண்டல அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் திருச்சி மத்திய மண்டல அணி கைப்பற்றியது. மேலும் ரைபிள் பிரிவில் ஓவர் ஆல் இரண்டாவது பரிசு சுழல் கேடயத்தையும், ரிவால்வர் பிரிவில் ஓவர் ஆல் மூன்றாவது பரிசு சுழல் கேடயத்தையும் திருச்சி மத்திய மண்டல அணி கைப்பற்றியது. சிறப்பு உதவி ஆய்வாளர் திருஞானம் தங்கப்பதக்கமும், முதல் நிலை காவலர் ராஜாராம் வெள்ளிப் பதக்கமும், காவலர் சுந்தரலிங்கம் ஒரு தங்கபதக்கமும் இரண்டு வெண்கல பதக்கமும் வென்றனர். கார்பைன் பிரிவில் முதல்நிலை காவலர் கலைச்செல்வன் ஒரு தங்கப்பதக்கமும், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர். ரைபில் பிரிவில் பெண் தலைமை காவலர் சோபியா லாரன்ஸ் 350 Yards பிரிவில் தங்கப்பதக்கமும், முதல் நிலை காவலர் பரமசிவம் 350 Yards snap பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

வெற்றி பெற்ற காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, ஐபிஎஸ் ஐயா அவர்களும் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் அமல்ராஜ், ஐபிஎஸ் வெகுவாக பாராட்டி பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினர். மேலும் பரிசுகள் மற்றும் பதக்கங்களை பெற்று வந்த காவலர்களை சிறப்பிக்கும் விதமாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், ஐபிஎஸ் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களை வெகுவாக பாராட்டினார்.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடத்தில் உள்ள நபர்கள் தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்