76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி மதுகடத்தலை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு

மதுகடத்தலை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு

திருச்சி – ஜன – 13,2022

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

1500 லிட்டர் பாண்டி சாராயம் கடத்திய நான்கு நபர்கள் கைது மற்றும் இரண்டு வாகளங்கள் பறிமுதல்

இன்று அதிகாலை செம்பனார்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் காவல் ஆளிநர்கள் காளஹஸ்திநாதபுரம் மாத்தூர் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த PY 01 AB 3304 பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்‌‌‌ட்‌‌‌ காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 1500 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. மேற்படி காரில் பாண்டி சாராயத்தை கடத்தி வந்த மன்னம்பந்தல் செங்கமேட்டு தெருவை சேர்ந்த சதிஷ் மகன் குமார் மற்றும் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாடு தோப்பு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜூ ஆகியோரை கைது செய்தும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த திருக்களாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில் மகன் முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேற்படி கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கடத்தி வரப்பட்ட பாண்டி சாராயம் மயிலாடுதுறை முளப்பாக்கத்தை சேர்ந்த மணி தேவர் மகன் அழகர் மற்றும் தூக்காணங்குளத்தை சேர்ந்த பிரபு ஆகியோருக்கு காரைக்காலில் இருந்து எடுத்து வந்தது என தெரிய வந்ததால் அழகரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மயிலாடுதுறை தூக்காணங்குளத்தை சேர்ந்த பிரபுவை தேடி வருகின்றனர். மேற்படி பாண்டி சாராயம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த தகவலை அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், இ.கா.ப உடனடியாக மது கடத்தலை தடுத்து நிறுத்திய சம்மந்தப்பட்ட செம்பனார்கோயில் காவல் நிலைய காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்