76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தேனி பொங்கள் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் மற்றும் சமுக ஒற்றுமை குறித்து டிஎஸ்பி தலைமையில்...

பொங்கள் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் மற்றும் சமுக ஒற்றுமை குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை

தேனி – ஜன – 11,2022

செய்தியாளர் – செல்வகுமார்

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது :

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே வழிகாட்டுதலின்படி பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்கள் மற்றும் இளைஞர்களுடன் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுத்திடும் வகையிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்திடும் கோக்கோடும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்திடும் வகையிலும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டவோ, ஒலிபெருக்கிகள் அமைத்து விளையாட்டு போட்டிகள் நடத்திடவோ கூடாது என்றும், வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திட வேண்டும், என்றும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதுடன்,சமுதாயத்தில் பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்திடும் வகையில் தவறுகள் நடப்பதாய் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி, தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வைரமணி, சார்பு ஆய்வாளர்கள் பாண்டியராஜன், மணிகண்டன், ஈஸ்வரன், முத்துமாரியப்பன், மற்றும் சக காவலர்கள்,உட்பட பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்