76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பதற்றமான‌ கிராம பகுதிகளில் ...

பதற்றமான‌ கிராம பகுதிகளில் “மாவட்ட எஸ்பி” தலைமையில் சமுக ஒற்றுமை கருத்தரங்கம்

தூத்துக்குடி – ஜன,06,2022

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு குற்ற செயல்கள் ஈடுபடாமல் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் ஒரே சமூகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மற்றும் இடப்பிரச்சினைகள் காரணமாக கடந்த 2 வருடங்களில் தொடர்ந்து 5 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதி மக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தெற்கு பொம்மையாபுரம் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் கடந்த 2 வருடங்களில் ஒரே சமூகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் மற்றும் இடப்பிரச்சினைகள் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மிகவும் வருந்தத்தக்கதாகும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் உங்கள் உறவினர்கள் தான். உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டு அது குற்ற செயல்களில் முடிவது பின் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்படபோவது உங்கள் குடும்பம் தான். உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தால் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் நன்றாக படித்து வருங்காலத்தில அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். நீங்களும் இதுபோன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு உங்கள் எதிர்காலத்தை கெடுத்து கொள்ளவேண்டாம். நீங்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு உங்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருந்தால் உங்கள் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களை நல்ல புத்தகங்கள் படிப்பது மற்றும் விளையாட்டுகளில் செலவிட்டு உங்கள் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிகொள்ளுங்கள். இளைஞர்கள் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். வீரத்துடன் கூடிய விவேகம் தான் இளைஞர்களை சிறப்பானவர்களாக மாற்றும். உங்களுடைய நோக்கம் கல்வி ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கல்வியை நல்லமுறையில் கற்று எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த சாதனையளர்களாக திகழவேண்டும். இனிமேல் இதுபோன்ற குற்ற சம்வங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா மற்றும் போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளரகள் சீதாராம், எபனேசர், தெற்கு பொம்மையார்புரம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகபாண்டி, ஊர் தலைவர் முருகன், முத்துப்பாண்டி, ஊர் பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்