76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை கொலைசெய்யமுயன்ற‌ இருண்டு நபர்களை துரத்திசென்று கைது செய்த காவல்துறையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

கொலைசெய்யமுயன்ற‌ இருண்டு நபர்களை துரத்திசென்று கைது செய்த காவல்துறையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஜன -14,2022

பேசின்பாலம் பகுதியில் தினேஷ்குமார் என்பவரை, கொலை செய்ய முயன்ற 2 நபர்களை துரத்திச்சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் G.புருஷோத்தமன் மற்றும் தலைமைக் காவலர் R.மோகன்குமார் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, திருமங்கலம் பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் (வ/38) என்பவர் 12.01.2022 அன்று இரவு பேசின்பாலம் பவர் ஹவுஸ் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி தினேஷ்குமாரை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனர். தினேஷ்குமார் இரத்த காயத்துடன் கூச்சலிட , அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் மற்றும் தலைமைக்காவலர் மோகன்குமார் ஆகிய இருவரும் உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட தினேஷ்குமாரை பத்திரமாக மீட்டனர். மேலும் துரிதமாக செயல்பட்டு தப்பியோடிய குற்றவாளிகளில் இருவரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இரத்த காயமடைந்த தினேஷ்குமாரை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வளார் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1) சஞ்சீவ்குமார் (வ/25) அயனாவரம் 2) பிரதீப்குமார் அயனாவரம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தினேஷ்குமார் என்பவர் தனது மனைவி சுடர்மதி என்பவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், தற்போது தினேஷ்குமாரின் மனைவி வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்து வருவதும், ராஜேஷின் தூண்டுதலின் பேரில் அவருக்கு அறிமுகமான சஞ்சீவ்குமார், பிரதீப்குமார், அஸ்வின்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து மேற்படி தினேஷ்குமாரை கத்தியால் தாக்கியுள்ளது தெரியவந்தது. குற்ற எதிரிகளிடமிருந்து 1 பட்டா கத்தி மற்றும் 1 இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் பணியின் போது துணிச்சலுடன் சிறப்பாக செயல்பட்டு கொலை சம்பவத்தை தடுத்து, 2 குற்றவாளிகளை துரத்திச்சென்று கைது செய்து, இரத்த காயமடைந்த தினேஷ்குமாரை தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.G.புருஷோத்தமன் மற்றும் தலைமைக்காவலர் மோகன்குமார் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்