74.4 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் 90,கிலோ கஞ்சா பறிமுதல் 4,பேர் கைது வண்ணார்பேட்டை போலீசாருக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்டு

சென்னையில் 90,கிலோ கஞ்சா பறிமுதல் 4,பேர் கைது வண்ணார்பேட்டை போலீசாருக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்டு

சென்னை – ஜன-08,2022

வண்ணாரப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 96 கிலோ கஞ்சா கைப்பற்றிய, வண்ணாரப்பேட்டை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

வண்ணாரப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய், முதல்நிலைக்காவலர்கள் முருகேஸ்வரன் சதாசிவம் காவலர்கள் முகமது காட்டுபாவா முகமது அசாருதீன் நல்லதம்பி ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கடந்த 03.01.2022 அன்று, மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1) மங்கராஜ் (வ/32) ஆந்திர மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

காவல் குழுவினர் விசாரணையில், மங்கராஜ் ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையைச் சேர்ந்த மேற்படி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், சம்பவத்தன்று மேலும் சிலருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த போது, காவல் குழுவினரிடம் சிக்கியது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் 2) சரண்ராஜ் (எ) சரண்குமார் (வ/24) காசிமேடு 3) நொண்டிலட்சுமி (வ/60) காசிமேடு 4) கவிதா (வ/25) திருவொற்றியூர் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 96 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல் பணியில், சிறப்பாக செயல்பட்டு, குற்ற எதிரிகளை கைது செய்த,வண்ணாரப்பேட்டை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்