76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் 10,கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் மாவட்ட எஸ்பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடியில் 10,கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் மாவட்ட எஸ்பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடி – ஜன-10,2022

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.

புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு யார்டில் ஒரு லாரியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாருக்‌‌‌கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப உடனடியாக சென்று சோதனையிட்டு விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், புதியம்புத்தூர் தனிப்பிரிவு தலைமை காவலர் அருள் முருகன் மற்றும் சிப்காட் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவானர் உள்ளிட்ட போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த யார்டில் நின்று கொண்டிருந்த வுN 51 மு 7099 டாரஸ் லாரியை சோதனை செய்ததில், அதில் சுமார் 20 டன் எடையுள்ள ரூபாய் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்படி லாரி நிறுத்தியிருந்த யார்டு ராகேஷ் 38/21 த/பெ. ஜெயராஜ், போல்பேட்டை, தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்றும், மேற்படி லாரி ராஜேஷ் த/பெ. கணேசன், மில்லர்புரம், தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மேற்படி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின் மேற்படி போலீசார் லாரியையும், அதில் இருந்த ரூபாய் 10 கோடி மதிப்பிலான சுமார் 20 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி இன்று தூத்துக்குடி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி லாரியில் பதுக்கி வைத்திருந்ததை செம்மரக்கட்டைகளையும் லாரியையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்