திருநெல்வேலி – டிச -16,2021
முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து யூடியூப்பர் மாரிதாஸ் சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்த குற்றத்திற்காக கைது செய்யபட்டு உயர் நீதிமன்றத்தால் அவ்வழக்கு ரத்து செய்யபட்ட நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பொய் இமெயில் வெளியிட்ட குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கபட்டார் இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரனா சம்பந்தமாக தப்லீக் ஜமாத் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக தமுமுக சார்பில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்டது அந்த வழக்கில் மாரிதாஸ் ஜாமின் பெறாத நிலையில் நெல்லை போலீசார் மாரிதாஸை கைது செய்துள்ளனர்