76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தேடப்பட்ட குற்றவாளியை மொபைல் செயலி மூலம் கைது செய்‌‌‌த எஸ்ஐக்கு எஸ்பி பாராட்டு

தேடப்பட்ட குற்றவாளியை மொபைல் செயலி மூலம் கைது செய்‌‌‌த எஸ்ஐக்கு எஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – டிச -28,2021

வாகன தணிக்கையின் போது பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த எதிரிகளை CCTNS Mobile App மூலம் கைது செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமையிலான தலைமை காவலர் அகஸ்டின், காவலர் முத்து கிருஷ்ணன், ஆகியோர் 27.12.2021 அன்று மாலை திருக்குறுங்குடி, ராஜபுதூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்தபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் அவர்கள் தனது செல்போனில் உள்ள CCTNS Mobile App மூலம் மேற்படி நபர்களின் பெயர்களை வைத்து தேடியதில் அவர்கள் பழைய வழக்கில் தேடப்பட்டு வந்த எதிரிகள் என தெரியவந்தது. மேற்படி ஏதிரிகள் மீது காவல்துறையினரால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப பணியில் திறமையாக செயல்பட்டு எதிரிகளை CCTNS Mobile App மூலம் கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் தலைமை காவலர் மற்றும் காவலருக்கும் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு மற்றும் வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்