அரியலூர் – டிச – 09,2021
அரியலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் விசாகா கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காவல்துறையில் அனைத்து காவல் நிலையம், ஆயுதப்படை, அனைத்து சிறப்புப் பிரிவுகள் , மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஆளிநர்கள் ,பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் அமைச்சு பணியாளர்களுக்கு தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் கொடுமைகள், துன்புறுத்தல்கள் , பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் அளிக்க “விசாகா கமிட்டி புகார் குழு அமைக்கப்பட்டது”
இந்த கமிட்டியில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் தலைமையில் கடை நிலை பெண் போலீசார் மற்றும் NGO உறுப்பினர்களாகக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
பணியின் போது உயர் அதிகாரிகளால் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எவ்வாறு கையாளுவது மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி, மாவட்ட அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் , அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
மேலும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையம் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகளிலும் “விசாகா கமிட்டி குழு” அமைக்கப்பட்டது.