திருநெல்வேலி – டிச -07,2021
நாடு முழுவதும் இன்று முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் விதமாக கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்று திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர்களான நெல்லை ஜவான்ஸ் அமைப்பினர் தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலன்களையும் காக்கும் சமுதாய கடமையை நிறைவேற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படும் கொடி நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சரவணன், இ.கா.ப நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.