தூத்துக்குடி – டிச – 14,2021
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய 4 பேர் கைது – ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்க நகைகள் மீட்பு – எதிரிகளை கண்டுபிடித்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்தோணிராஜ் (53) த/பெ. முத்து, கதிர்வேல்நகர், என்பவர் ஏற்றுமதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 08.10.2021 அன்று வேலைக்கு சென்றிருந்தபோது இவரது வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம் உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முதல் நிலை காவலர்கள் சுந்தரராஜ், கணேசன், காவலர்கள் மீனாட்சிசுந்தரம், சதீஷ்குமார், சதீஷ் தணிகைராஜா மற்றும் திவான்பாஷா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 1) மனோஜ்ராஜ் (35), த/பெ. ஜேக்கப், அம்மன்நகர் சேலம் மாவட்டம், 2) கார்த்திக்ராஜா (24), த/பெ கண்ணன், ரத்தினபுரி, கோயம்புத்தூர் மாவட்டம், 3) ராஜாராம் (26), த/பெ கண்ணன், ரத்தினபுரி, கோயம்புத்தூர் மற்றும் 4) திலீப்திவாகர் (26), த/பெ. விருமாண்டி, சூர்யாநகர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்போது காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் 4 எதிரிகளையும் திருச்சி மத்திய சிறையிலிருந்து காவல் நிலைய விசாரணைக்கு எடுத்து அவர்களை விசாரணை செய்ததில் மேற்படி எதிரிகள் 4 பேரும் புகார்தார் அந்தோணிராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 45 பவுன் நகைகளை திருடியதை ஒப்புகொண்டனர். உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளிடமிருந்து திருடுபோன 44 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின் எதிரிகள் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி எதிரிகளில் மனோஜ்ராஜ் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 10 திருட்டு வழக்குகளும், எதிரி கார்த்திக் ராஜா மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 12 திருட்டு வழக்குகளும், எதிரி ராஜாராம் மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 வழக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 16 திருட்டு வழக்குகளும், எதிரி திலீப் திவாகர் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 14 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய எதிரிகளை கண்டுபிடித்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.