திருப்பத்தூர் – டிச – 03,2021
மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கருத்து கேட்கும் கூடம் (Feedback cell) செயல்பட்டு வருகிறது. இக்கூடத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்படும் FIR மற்றும் CSR களின் புகார்தாரர்கள் இடம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 1450 CSR -களில் 99 புகார்தாரர் களும், 325 FIR -களில் 35 புகார்தாரர்களும் போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கண்ட 134 புகார்தாரர்களை இன்று நேரில் அழைத்து அதிருப்திகான கருத்து கேட்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புகார்தாரர் களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக கேட்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்
இந்நிகழ்வானது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளி குறையும் வகையிலும், காவல்துறையினரின் மீதான பொது மக்களின் பார்வை மேம் படும் வகையிலும் அமைந்தது.