80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி திருச்செந்தூர் தேரிகுடியிருப்பு கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டார்

திருச்செந்தூர் தேரிகுடியிருப்பு கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் பார்வையிட்டார்

தூத்துக்குடி – டிச -16,2021

திருச்செந்தூர் தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கடந்த 17.11.2021 அன்று தொடங்கி நாளை 17.12.2021 முடிவடைகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்றும் நாளையும் (17.12.2021) நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று கோவில் வளாகம் மற்றும் கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும் பகுதிக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்