76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுடன் எஸ்பி கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுடன் எஸ்பி கலந்துரையாடல்

தூத்துக்குடி – டிச -07,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் பொதுமக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோவில் வளாகம் மற்றும் கணபதி கோயில் தெரு சமுதாய நலக்கூடம் ஆகிய 2 இடங்களில் இன்று பொதுமக்களுடன் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் தங்கள் ஊர் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட ஊர்களில் இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்தி ஊரில் உள்ள குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தற்போது இங்கு இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் உங்களது குறைகளை தெரிவித்துள்ளீர்கள், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உங்களது குறைகளை தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணிற்கு அனைவரும் தொடர்பு கொள்ளலாம். மேற்படி எண்கள் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே மேற்படி எண்களை பெண்கள்; மற்றும் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனை நேர்ந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். மேலும் வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் முருகன், வல்லநாடு கூட்டுறவு வங்கி தலைவர் பரமேஸ்வரன், வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் கோயில் தன்னார்வலர் குழு உறுப்பினர் தங்கராஜ் ஊர் பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்