93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் குற்றமில்லா , விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

குற்றமில்லா , விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

கோயம்புத்தூர் – டிச – 16,2021

காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., உத்தரவுப்படி “குற்றமில்லா கோவை மாநகரை உருவாக்கவும், விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்கவும்”, கோவை மாநகரக் காவல் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் அந்தந்த சரகப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் அனைத்து வகையான ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை ஒடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிமுறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்கள்(181,1098) பற்றியும், போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் ஆணையர் அவர்கள் PPG கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே “Students Parliament” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவியர்கள் மற்றும் மாணவர்கள் தைரியமாக காவல்துறையினரை அணுகி தங்கள் பாதிக்கப்பட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள KAVALAN APP ( காவலன் செயலி) அனைத்து மாணவ மாணவிகளும் மற்றும் அவர்களது பெற்றோரையும் பதிவிறக்கம் செய்யவும் வலியுறுத்தினார். மேலும் மாணவ, மாணவிகள் கல்லூரி காலங்களில் கல்வி மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி மனம் மற்றும் உடலையும் உறுதியாக வைத்துக் கொள்ளவும், கல்லூரி காலங்களிலேயே போட்டி தேர்வுக்களுக்கு தயாராக, வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் பற்றி கோவை மாநகர காவல் துறைக்குத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்களுடைய தகவல்கள் இரகசியம் காக்கப்படும்.

#கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ள: 📞 0422-2300970 மற்றும் 📱9498181213 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும், 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்க விரும்புவோர்: [email protected] என்ற முகவரியிலும், சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள Twitter : @policecbecity வழியாகவும் Facebook : @cbecitypoliceofficial மூலமும் காவல்துறைக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்