73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை மக்களின் நம்பிக்கை பெற்ற எஸ்பி

கோவை மக்களின் நம்பிக்கை பெற்ற எஸ்பி

கோயம்புத்தூர் – டிச -19,2021

கோவை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்கானிப்பாளராக செல்வ நாகரத்தினம் .ஐ.பி.எஸ் பொறுப்பேற்று சில மாதங்கள் தான் ஆகிறது. இந்த சில மாதங்களில் கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக ஆயிரக்கணக்கானோரை மாவட்டம் முழுவதும் போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இதனைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை பலர் வாங்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு பல நபர்கள் விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் IPS மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில், கடந்த மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக ஆயிரக்கணக்கான வழக்குபதிவு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் மது கடத்தி வரும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஒரு நம்பர் லாட்டரி தொழிலில் ஈடுபடும் கும்பல், கஞ்சா, குட்கா, பான் மசாலா என போதை பொருட்கள் விற்பனை நபர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் மேலும் மாவட்டத்தில் சட்ட விரோத செயல் புரிவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் எஸ் பி செல்வ நாகரத்தினம் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இனி சட்டவிரோத செயலுக்கு இடமில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறார் இந்த இளம் எஸ்.பி. இவரின் உத்தரவின்படி மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்து மேட்டுப்பாளையம் காவல் கோட்டத்தில்
அரசு அறிவித்த நேரத்தை விட விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி கஞ்சா போதைப் பாக்கு போன்ற சட்ட விரோதமான பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார் மேலும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க தனி செல்போன் நம்பர் வெளியிட்டுள்ளார் மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த காவல் துறை அதிகாரிகளை நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார் இது போன்ற நடவடிக்கை எடுத்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் கோவை மாவட்டம் போதைப்பொருட்கள் சட்டவிரோத செயல்கள் இல்லாத மாவட்டமாக மாறும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் பரவலாக பேசி வருகிறார்கள்‌‌‌

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்