76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தடயம்‌‌‌ இல்லாத கொள்ளை வழக்கில் தனிகவனம் செலுத்தி குற்றவாளியை கைது செய்து...

தடயம்‌‌‌ இல்லாத கொள்ளை வழக்கில் தனிகவனம் செலுத்தி குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட காவலர்‌‌‌களுக்‌‌‌கு எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு‌

திருநெல்வேலி – டிச – 31,2021

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 15 பவுன் தங்கசெயின் மற்றும் 77 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் எதிரியை கைது செய்து 15 பவுன் நகை மீட்டுக் கொடுத்த காவலர்களுக்கு பாராட்டு.

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த 20.12.2021ம் தேதி அன்று முன்னீர்பள்ளம் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 15 பவுன் செயின் மற்றும் 77 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காத நிலையில் இவ்வழக்கின் எதிரியை பிடிக்க முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான தலைமை காவலர் குமார்,மற்றும் காவலர் வேல்முருகன் ஆகிய இருவரும் மேற்படி திருட்டு வழக்கில் தனி கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 16 இடங்களில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து பார்த்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த பத்மலோஜன் பாண்டே (தற்போது அடைமதிப்பான் குளத்தில் வசித்து வருகிறார்) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் காவலர்கள் மேற்படி எதிரி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட 15 பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப, விடாமுயற்சி மற்றும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு எதிரியை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசு மற்றும் வெகுமதி வழங்கினார். மேலும் காவல் கண்காணிப்பாளர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உள்ள நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளை சுத்தமாக வைக்க காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்