திண்டுக்கல் – டிச – 04,2021
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் ஒரு தனிப்படை என 7 தனிப்படைகளும் | மற்றும் இரண்டு பாவட்ட தனிப்படை என மொத்தம் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கப்படுவார்கள் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.