திருவாரூர் – டிச -04,2021
விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி
நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு
மன்னார்குடி நகர காவல் சரகம், ஆறாம் நம்பர் வாய்க்கால் என்ற இடத்தில் 03.12.2021 அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற வசந்த் (22/21), த/பெ.ரவிச்சந்திரன், கருவாக்குறிச்சி என்ற கல்லூரி மாணவர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது அவ்வழியாக தனது குடும்பத்துடன் சென்றுக்கொண்டிருந்த மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் .வனஜா, க/பெ.ஆனந்தன் கோட்டூர்தோட்டம் என்பவர் மனித உயிருக்கு மதிப்பு அளித்து, அவரது உயிரை காப்பாற்றும் விதமாக அற்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, விரைந்து முதலுதவி செய்து உயிருக்கு போராடிய அந்நபரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனித நேயத்துடன் செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார். மேற்படி செவிலியர் வனஜாவின் இத்தகைய மனித நேய செயலுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், இ.கா.ப பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS., மேற்படி செவிலியர் வனஜா அவர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவரது அற்பணிப்பு உணர்வு, சமூக அக்கறை ஆகியவற்றை பாராட்டியும், அவரது செவிலியர் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தும் நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவித்தார்