76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மனம் திருந்திய ரவுடிகளின்‌ பெயர்கள் ஹிஸ்ட்ரி சீட் பதிவேட்‌‌‌டிலிருந்து நீக்கம் - மாவட்ட எஸ்பி உத்தரவு

மனம் திருந்திய ரவுடிகளின்‌ பெயர்கள் ஹிஸ்ட்ரி சீட் பதிவேட்‌‌‌டிலிருந்து நீக்கம் – மாவட்ட எஸ்பி உத்தரவு

தூத்துக்குடி – டிச – 31,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் காவல் நிலைய சரித்திர குற்ற பதிவேட்டிலிருந்து எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடுளை ரத்து செய்ய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ரவுடித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரித்திர குற்ற பதிவேடு (Rowdy History Sheet) பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1794 குற்றவாளிகள் மீது சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில்; உள்ள 1794 சரித்திர குற்ற பதிவேடு (Rowdy History Sheet) கொண்ட குற்றவாளிகளின் கடந்த 5 ஆண்டு கால நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட உட்கோட்ட காவல்துறை உதவி காண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட ஆய்வுக்குழு ஆய்வு செய்தனர். இதில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாதவர்கள், வயதானவர்கள் என 164 பேர் மீது பராமரிக்கப்பட்டு வருபவர்களை இன்று காவல் அலுலவக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை செய்து, அவர்களது சரித்திர பதிவேடை முடித்து வைக்க அறிவுறுத்தினார். அப்போது ரத்து செய்யப்பட்டவர்கள் இனி வருங்காலங்களில், அவர்கள் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் மறுபடியும் அவர்களுக்கு சரித்திரப்பதிவேடுகள் ஆரம்பிக்கப்படும் என்று எச்சரித்து, நாளை பிறக்கின்ற புத்தாண்டு தினத்தில் புதுவாழ்வு வாழ அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, தூத்துக்குடி ஊரகம் சந்தீஸ் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்