76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி – டிச -23,2021

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமீர்வியாஸ்நகர் பகுதியில் உள்ள சோனா மஹாலில் வைத்து இன்று திருநங்கைகள் மற்றும் அப்பகுதியிலுள்ள பெண்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த குற்றங்களுக்கென தனியாக சட்டங்களும் உள்ளது. அதில் மரணதண்டனை வரை பெற்று தரக்கூடிய வழிவகைகள் உள்ளது. தற்போது சமுதாயத்தில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். மேலும் திருநங்கைகளுக்கென்று சட்ட உதவி மையங்கள் உள்ளது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர் சொர்ணலதா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உட்பட பெண்கள் மற்றும் திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்