கள்ளக்குறிச்சி – டிச -03,2021
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்கின் இ.கா.ப சீரிய முயற்சியால் நமது மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரது குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை பெற்று வழங்கினார்.
கடந்த 17.02.2021 அன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமச்சந்திரன் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதே போன்று கடந்த 29.10.2019-ந் தேதி தியாகதுருகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது அகால மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கி, இறந்த காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.