திண்டுக்கல் – டிச -02,2021
வேடசந்தூர் உட்கோட்டம் குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலயத்தில் கடந்த 03.11.21 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு நடந்த வாகன விபத்தில் பாளயத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கார்த்திக் 26/21 என்பவரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் மருதமுத்து 27/21 என்பவரும் சம்பவ இடத்தில் இறந்து விட்டனர். இதன் சம்பந்தமாக குஜிலியம்பாறை காவல்நிலைய குற்ற எண் 716/21 u/s 279,337,304(A) என வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவர்கள் இருவருக்கும் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்தில் காவல்துறையினர் சார்பாக பேசி இரு குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் இன்று காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் பேக்டரி நிர்வாகத்தினர் சேர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டது.