81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மெச்சதகுந்த பணிக்காக 2,எஸ்ஐ உட்பட 8,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

மெச்சதகுந்த பணிக்காக 2,எஸ்ஐ உட்பட 8,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – டிச -16,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 8 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 10.12.2021 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய வழக்கில் எதிரிகள் இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 2,54,472/- மதிப்புள்ள 385 கிலோ புகையிலை பொருட்களையும் கைப்பற்றிய தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரவிக்குமார், நாலாட்டின்புதூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ரமேஷ் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2014 ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கண்டுபிடித்து கைது செய்த கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஆறுமுகதுரை ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

முத்தையாபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 69 வழக்குகளை லோக் அதாலத் நீதிமன்றத்தில் முடித்த முத்தையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் அப்பாதுரை மற்றும் முதல்நிலைக் காவலர் ஐயப்பன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளை லோக் அதாலத் நீதிமன்றத்தில் முடித்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய பெண் தலைமை காவலர் சத்தியபாமா என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 8 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்