79.8 F
Tirunelveli
Saturday, August 20, 2022
முகப்பு தமிழ்நாடு சிப்பிக்குள் முத்து என்‌‌‌று முத்‌‌‌தெடுக்‌‌‌கும்‌‌‌ தொழிலாளியின்‌‌‌ நேர்மைக்கு "எஸ்பி" பாராட்டு

சிப்பிக்குள் முத்து என்‌‌‌று முத்‌‌‌தெடுக்‌‌‌கும்‌‌‌ தொழிலாளியின்‌‌‌ நேர்மைக்கு “எஸ்பி” பாராட்டு

தூத்துக்குடி – டிச – 28,2021

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது தவறவிட்ட 5 பவுன் தாலி செயினை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் அழைத்து இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.

கடந்த 23.12.2021 அன்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அங்கயற்கன்னி மற்றும் அவரது கணவர் மதுசூதனன் ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தபோது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி அங்கயற்ககன்னியின் 5 பவுன் தாலிச்செயின் கடலில் அறுந்து விழுந்துள்ளது.

உடனே அங்கு இருந்த கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களான திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்த ஜான் (எ) சிவராஜா (38), த/பெ. சந்திரசேகரன் மற்றும் சரவணன் (34), த/பெ. ஜோசப் (எ) ரத்தினம் ஆகிய இருவரும் மேற்படி அங்கயற்கரசியின் கடலில் விழுந்த தாலிசெயினை 2 நாட்களாக கடலில் தேடி எடுத்து, கடந்த 25.12.2021 அன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கனகபாய் மூலம் தாலிசெயினின் உரிமையாளரான அங்கயற்கன்னியிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி தாலிசெயினை கடலில் தேடி எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த மேற்படி ஜான் (எ) சிவராஜா மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஜான் (எ) சிவராஜா மற்றும் சரவணன் ஆகியோரை நேரில் அழைத்து, அவர்களை கௌரவித்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.

19,724FansLike
101FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது…..

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் -19,2022 திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன்,இ.க.பா., தலைமையில்...

கஞ்சா கந்‌‌‌துவட்‌‌‌டி ரவுடிசம்‌‌‌ போன்ற குற்றங்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஆகஸ்ட் -18,2022 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம்‌‌‌ மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

நெல்லை பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு போதை பொருளின் தீங்கு குறித்து துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை - ஆகஸ்ட் -18,2022 நெல்லை பாளையில் பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழாவில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையேற்று அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ்‌‌‌ போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ அதிரடி….

0
நெல்லை - ஆகஸ்ட் -17,2022 திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி...

நெல்லையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களின் தீங்கு குறித்து துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை - ஆகஸ்‌‌‌ட்‌‌‌ - 17,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்