93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி மெச்சதகுந்த பணிக்காக ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு....

மெச்சதகுந்த பணிக்காக ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு….

தென்காசி – டிச -12,2021

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது, இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற செயல்கள் பற்றியும்,குற்ற செயல்களை எவ்வாறு விரைவாக செயல்பட்டு கண்டறிவது என்பது பற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குற்றங்களை தடுப்பதற்கும் நடந்த குற்றத்தை விரைவாக கண்டறிவதற்கும் அதிக அளவு CCTV கேமராக்களை அமைத்த கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ்‌‌‌க்‌‌‌கு சிறந்த செயல்படும் அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது, குற்றங்களை திறன்பட கண்டறிவதற்காக தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு சிறந்த புலன்விசாரணை அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது, காவல் நிலையத்திலும் பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று சிறப்பாக செயல்பட்டதற்காக புளியரை சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் அவர்களுக்கு சிறந்த நிலைய பொறுப்பு அதிகாரி என்ற கோப்பை வழங்கப்பட்டது, மேலும் சம்மன் மற்றும் சாட்சிகள் ஆகியவற்றை திறன்பட நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விரைவாக தீர்ப்பு பெற செய்த செங்கோட்டை காவல் நிலைய முதலாம் நிலை காவலர்கள் சங்கர் மற்றும் முருகன் ஆகியோருக்கு சிறந்த நீதிமன்ற காவலர்கள் என்ற கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக குற்றத்தை திறம்பட கண்டறிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு IUCAW, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் சைபர் கிரைம் மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்