94.9 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி விழிப்புணர்வு

சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி விழிப்புணர்வு

தூத்துக்குடி – டிச -17,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீச் ரோடு பகுதியில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மாணவ, மாணவியருக்கு மிக அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு செல்போனும் ஒரு காரணமாக உள்ளது. பெண்கள் தேவையில்லாமல் தங்களது புகைப்படங்களையோ, சுய விவரங்களையோ சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதனை பற்றிய விழப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகதான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வி ஒன்றுதான் மாணவர்களுக்கு முக்கியமானதாகும், உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து சிறந்த புத்தகங்கள் படிப்பது அல்லது விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதம், கால்டுவெல் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், தாளாளர் சாந்தி வேதமாணிக்கம் மற்றும் வடபாகம் காவல் நிலைய போலீசார் உட்பட பள்ளி மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
87FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்