73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தர்மபுரி பள்ளி மாணவர்களுக்கு இணையதள பாதிப்புகள் மற்றும் மோசடி குறித்து எஸ்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

பள்ளி மாணவர்களுக்கு இணையதள பாதிப்புகள் மற்றும் மோசடி குறித்து எஸ்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தர்மபுரி – டிச -08,2021

மாணவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகள் மற்றும் பணம் இழப்பு குறித்தும் சைபர் க்ரைம் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் எவ்வாறு மிரட்டி பணம் பறிக்கின்றனர் இச்செயல்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும். குழந்தைகள் பாதுகாப்பு உதவி 1098 , மகளிர் பாதுகாப்பு உதவி எண் 181 பற்றி விவரி அவசர காலத்தில் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாணவிகள் தங்களது பிரச்சினைகளை மனம் திறந்து பேசவேண்டும் மற்றும் உரிமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சமீப காலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவ , மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழிப்பது அதிகமாக உள்ளது ஆனால் இணையத்தில் இருக்கும் ஆபத்து உணராமல் விழிப்புணர்வு இன்றி வரும் மாணவிகளுக்கு சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டாம் என்றும் பெண்கள் முகம் தெரியாத நபரிடம் ஆன்லைனில் பழகுவதை தவிர்க்க வேண்டும் அதேபோல் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்ப்பது நல்லது இணைய குற்றவாளிகள் போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் எனவே மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது மனம் தளராமல் தைரியமாக காவல் துறையை அணுகவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தினார். மேலும் விழிப்புணர்வு குறும்படம் மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்