76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் மதுரை டிஐஜி ,ஐஜிகளால் தீர்க்கமுடியாத காவலரின் குறைகளுக்கு டிஜிபி தீர்வு. முக்கிய மனுக்கள்‌‌‌ முதல்வருக்கு பரந்துரை

டிஐஜி ,ஐஜிகளால் தீர்க்கமுடியாத காவலரின் குறைகளுக்கு டிஜிபி தீர்வு. முக்கிய மனுக்கள்‌‌‌ முதல்வருக்கு பரந்துரை

மதுரை – டிச – 17,2021

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல்துறையில் குறை தீர்ப்பு முகாம்கள் கீழ்க்காணும் மூன்று நிலைகளில் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு குறைகள் மீது தீர்வு காணப்பட்டன.

38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 ஆணையரகங்களில் காவல் ஆணையர்களால் 5,230 மனுக்கள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

அவர்களால் தீர்க்கப்படாத மனுக்கள் 11 காவல்துறை துணை தலைவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் களால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.

சரக காவல்துறை துணைத் தலைவர்கள் தீர்வு காணப்படாத மனுக்கள் மண்டல காவல்துறை தலைவர்களால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் கடந்த 03.12.2021 அன்று வடக்கு மண்டல காவலர்களை குறைதீர்க்க அவர்களை நேரில் சந்தித்து 300 மனுக்கள் பெற்றார்.

அதேபோல் கடந்த 08.12.2021 அன்று சென்னை மாநகர காவலர்களிடம் இருந்து நேரடியாக 740 மனுக்கள் பெற்றார்.

நேற்று 16.12.2021 மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகர குறை தீர்க்க திருச்சியில் நேரிடையாக 600 மனுக்களை பெற்றார்

அதேபோல் தெற்கு மண்டலம் மதுரை மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாநகர காவலர்களின் குறைதீர்க்க சுமார் 900 காவலர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலனவை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவலர்களின் குறைகள் உடனே களையப்பட்டது. ஏனைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது

சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக 1,340 மனுக்கள் கடந்த ஜூலை முதல் நவம்பர் 2021 வரை காவலர்கள் மற்றும் அலுவலர்களிடம் பெறப்பட்டன. இதில் 1058 கருணை மனுக்கள் அவற்றில் 366 மனுக்கள் மீது தண்டனையை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 51 பேர் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டு இருக்கிறது.

மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறை தலைமை இயக்குனர் மனுக்களை பரிசீலனை செய்து 1,353 காவலர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது காவலர்கள் இடையே காவல்துறை தலைமை இயக்குனர் தற்போது காவலர்களுக்காக எடுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் கூறினார்கள். முக்கியமாக காவலர்களுக்கு கட்டப்படும் வீடுகள் முன்னர் வெறும் 325 சதுர அடியாக இருந்தது தற்போது 750 சதுர அடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது இதன் மூலம் காவலர்களின் குடும்பங்களில் இனிமையாக வாழ ஏதுவாக இருக்கும் என்றும் காவலர்களின் மன உளைச்சலை குறைக்க கண்டிப்பாக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுக்கும் திட்டத்தை சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு அவர்களுக்கு உண்டான ஏனைய குறைகளும் படிப்படியாக களையப்படும் என்றும் ஆகையால் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் மூலம் தீர்வு காணப்படாத காவலர்களின் புகார் மனுக்கள் முதலமைச்சரிடம்‌‌‌ நேரில் சமர்ப்பிக்கப்படும் என இந்த குறைதீர்ப்பு முகாமில் கூறியுள்ளார்

இந்த குறைதீர்ப்பு முகாமில் தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு இ.கா.ப. மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா இ.கா.ப கலந்து கொண்டார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்