சேலம் – டிச -07,2021
சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய சரகத்தில் எருமாபாளையம் மெயின் ரோடு, கிச்சிப்பாளையம், SMC காலணி, களரம்பட்டி, பொச்சின் ரோடு, நாராயண நகர், குறிஞ்சி நகர் ஹவுசிங்போர்டு, கோவிந்தசாமி நகர், ராஜா பிள்ளை காடு, பாத்திமா நகர், சன்னியாசிகுண்டு, சங்கிலி ஆசாரி காடு ஆகிய பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு 153 நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேற்படி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்து பொதுமக்களிடையே உரையாற்றுகையில் தற்போதைய சூழலில் கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து விளக்கி கூறினார். சேலம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இவ்விழாவில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு மோகன்ராஜ் அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு மாடசாமி , சேலம் மாநகர கூடுதல் காவல் துணை ஆணையாளர் கும்மராஜா (CWC) , சேலம் மாநகரம் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் சரவணன் , காவல் உதவி ஆணையாளர் அன்னதானப்பட்டி சரகம் அசோகன், மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.