81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் சென்னை கொரனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு 25,லட்சம் நிதியுதவியை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

கொரனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு 25,லட்சம் நிதியுதவியை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை – டிச – 16,2021

செய்தியாளர் :கே.நியாஸ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான வரையோலையையும், பணியின்போது இறந்த மேலும் 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவசிசிக்சை பெற்ற போக்குவரத்து தலைமைக் காவலருக்கு காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் நலநிதியிலிருந்து ரூ.5.2 லட்சத்தை ரொக்கமாக வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கொரானா நோய் தொற்று தடுப்பு பணியின் போது, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை பெருநகர காவல் தலைமைச்செயலக காலனி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு குடும்பத்திற்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மற்றும் சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்தபோது, உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துக்களில் இறந்த சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்துப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்புப்பிரிவுகளில் பணிபுரிந்த 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சம் நிதியுதவி ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று மதியம், காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மனைவியிடம் ரூ.25 லட்சத்திற்கான வரைவோலையையும், மேலும் பணியின்போது இறந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையிலான 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் என 30 காவல் குடும்பத்தினருக்கு ரூ.90 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு Chemo Therapy சிகிச்சை பெற்ற திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் பிரபு (த.கா.24131) என்பவருக்கு, மேற்படி மருத்துவசிகிச்சைக்கு செலவான ரூ.5.2 லட்சத்தை காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் நலநிதியிலிருந்து ரொக்கமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் லோகநாதன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் தலைமையிடம் சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்