திருநெல்வேலி – டிச – 07,2021
சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் இன்று சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரவு ரோந்தின்போது சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் பொன்னுசாமி, மற்றும் காவலர் சண்முகம் ஆகியோர்க்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.
மேலும் ஆறு ஆண்டுகாலம் நிலுவையில் இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கேரளாவில் தலைமறைவாக இருந்த எதிரி அர்ஜூன் என்பவரை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாபூஜன், இரண்டாம் நிலை காவலர் செந்தில்குமார், காவலர் பசிர் ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., வெகுமதி வழங்கினார். அப்போது சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சுகாதேவி, ,
உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.