திருநெல்வேலி – டிச – 17,2021
இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் மாரிதாஸ் வழக்கில் பிணை மனு இன்று விசாரணைக்கு வந்தது அந்த ஜாமின் மனுவை நிராகரிக்க கோரி மனுதாரர் முகம்மது காதர் மீரான் தரப்பில் பினை மறுப்பு இண்டர்வீனர் மனு தாக்கல் செய்யப்பட்டது. முத்தவழக்கறிஞரும் மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான ஏ.முஹம்மது உசேன் மற்றும் வழக்கறிஞர்கள் வினோத், மற்றும் இதர வழக்கறிஞர்கள் முகம்மது தவ்பிக், இப்ராஹீம் பாதுஷா, அப்துல் நிஜாம், நிவேதா, அக்மல்கசாலி, முகம்மது நயினார், முகம்மது சல்மான் பாதுஷா, அப்துல் ஜப்பார், பழனி, ஜெசிமா, மாரி லெட்சுமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜராஜன் பிணை மனு நிராகரிக்க கோரி மனுவும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதனை ஏற்று பினண வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் பிணை மனு விசாரணையை வரும் திங்கள் கிழமை ஒத்தி வைத்துள்ளது.
வழக்கறிஞர்கள் உடன் தமுமுக மமக நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.