76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி 6,லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு உரியவரிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைப்பு

6,லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு உரியவரிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைப்பு

திருநெல்வேலி – டிச – 30,2021

ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள 3¾ சென்ட் நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த ஆதிலெட்சுமி, என்பவருக்கு கொண்டாநகரத்தில்ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள 3¾ சென்ட் இடம் உள்ளது. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது கணவர் இடத்தின் பத்திரத்தை அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். இதனை பயன்படுத்தி சந்திரசேகர் அந்த இடத்தை வேறொரு நபருக்கு கிரையம் செய்து உள்ளார். இதனை அறிந்த ஆதிலெட்சுமி தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., மனு அளித்தார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் தனலெட்சுமி. தலைமையிலான முதல் நிலை காவலர் .கணேசன், சண்முகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூபாய் 6 இலட்சம் மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., நில உரிமையாளரான ஆதிலெட்சமி அவர்களுக்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தினை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் , இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்