தூத்துக்குடி – டிச -16,2021
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், சேராகுளம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், ஏரல், சாயர்புரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் வசந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.