திருவாரூர் – டிச – 18,2021
செய்தியாளர் – சோமாஸ் கந்தன்
திருவாரூர் மாவட்ட காவல்துறை
மாவட்ட ஆயுதப்படையில் காவலர் குடும்பங்கள் நலன் கருதி மத்தியமண்டல காவல்துறை தலைவர்
தலைமையில் காவலர் நலன் காய்கனி அங்காடி திறப்புவிழா
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்
311 காவலர்
குடியிருப்புகள் அமைந்துள்ளது.
இதில் காவல் அலுவலர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஆயுதப்படை காவலர்கள் பல்வேறு
காவல் பணிகள் காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும்போது அவர்களது குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் வாங்க வெளியில் செல்லவேண்டிய சிரமமான சூழல் இருந்துவந்தது.
இந்நிலையில் காவலர் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கவும்,
காய்கனிகளை
விலை மலிவாகவும்
தரமாகவும் வாங்கும் விதமாக
மத்திய மண்டல காவல்துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் IPS உத்தரவிட்டதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS
அவர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இருந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து அதில் காவலர் குடும்பங்களுக்கு தேவையாக காய்கனி வகைகளை வாங்கிவைத்து காவலர்கள் மூலமாகவே தரமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
அவ்வாறு அமைக்கப்பட்ட காவலர் நலன் காய்கனி அங்காடியை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் இன்று ஆயுதப்படைக்கு வருகைதந்து திறந்துவைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்குடும்பத்தினர் சுமார் 100 பேர் கலந்துகொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றி தெரிவித்தார்
மேலும் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடும்பங்கள் கோரிக்கையின்பேரில் அத்தியாவசிய பொருட்கள்,மருந்து
பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பு தெரிவித்துள்ளார்